வரலாற்றில் ஒரு போதும் இல்லாத வீழ்ச்சி- ரணிலுக்கு வாக்களிக்க வேண்டியதன் காரணத்தை கூறும் பிரதமர்!

வரலாற்றில் ஒரு போதும் இல்லாத வீழ்ச்சி- ரணிலுக்கு வாக்களிக்க வேண்டியதன் காரணத்தை கூறும் பிரதமர்!

வரலாற்றில் ஒருபோதுமில்லாத வங்குரோத்து நிலை நாட்டில் உருவானதுடன் ஆட்சி வீழ்ச்சியடைந்தது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அன்றாட செயற்பாடுகள் தடைப்பட்டன. இதனைப் பயன்படுத்திய சில சக்திகள் முக்கிய இடங்களை தாக்கி நாட்டை அராஜக நிலைக்கு தள்ள முயன்றனர். அந்தக் குழு இன்று வேறு விதமாக செயற்படுகின்றது.

பல தடவைகள் அமைச்சு பதவிகள், பிரதமர் பதவிகள் வகித்துள்ள அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவராக நாட்டைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை மீட்டெடுத்தார்.

ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் மத்திய நிலையமாக மலையகம் காணப்படுகிறது. பொய் வாக்குறுதிகளுக்கும் சாத்தியமற்ற விடயங்களையும் முன்வைத்து ஆட்சியைப்பெற முடியும் என அநுர எதிர்பார்க்கிறார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான எம்.பிகளின் ஒத்துழைப்பு கிடைத்தது. 3 எம்.பிகளை கொண்டு ஒரு சட்டத்தையாவது நிறைவேற்ற முடியுமா? அரசியலமைப்பு ரீதியான நெருக்கடியே இவர்களால் ஏற்படும். எதிர்காலத்தை பலப்படுத்த அனைவரும் இணைந்து பங்களிப்போம்.

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களை நிறைவேற்ற நாமும் ஒத்துழைப்போம். தேரவாத பொருளாதாரத்தை முன்னெடுக்க பரிந்துரைத்துள்ள ஜனாதிபதியின் திட்டத்துடன் அனைவரும் கைகோர்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.