வில்பத்து காடழிப்பு - றிசாத் பதியூதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை!

யுத்த காலத்தில், இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை, மீள்குடியேற்றும் போர்வையில் மேற்கொள்ளப்பட்ட, வில்பத்து காடழிப்புக்கான, மீள்நடுகைக்காக, நிர்ணயிக்கப்பட்ட தொகையை, செலுத்தாதமை காரணமாக, முன்னாள் அமைச்சர் றிசாத் பதியூதீனுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தல் அனுப்பியுள்ளது.

மீள்நடுகைக்காக, ஆயிரத்து 67 மில்லியன் ரூபாவை, அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும் என 2020 நவம்பர் 16 ஆம் திகதி, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், குறித்த தொகையை, அமைச்சர் இதுவரையில் செலுத்தவில்லை என, சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம், மீண்டுமொரு மனுவைத் தாக்கல் செய்து நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுசென்றது.

இதனையடுத்து, குறித்த மனு இன்று அழைக்கப்பட்டது.

இதன்போது, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதியரசர் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன, முன்னாள் அமைச்சர் றிசாத் பதியூதீனுக்கு எதிராக குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அத்துடன், வழக்கு விசாரணைகளை, அடுத்த மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.