ரோஹிட் சர்மாவின் இடது கையின் பெருவிரலில் காயம்!
உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் இறுதிப் போட்டி, நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், இந்திய அணித் தலைவர் ரோஹிட் சர்மாவின், இடது கையின் பெருவிரலில், காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் இறுதிப் போட்டி, நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், இந்திய அணித் தலைவர் ரோஹிட் சர்மாவின், இடது கையின் பெருவிரலில், காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற பயிற்சி ஆட்டத்தின்போது, அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதையடுத்து, அவர் பயிற்சியைத் தொடரவில்லை என்றும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும், அது பெரிய அளவிலான காயம் இல்லை எனவும், ரோஹித் சர்மா சிறந்த உடற்தகுதியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2ஆவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
சம்பியன் பட்டத்தை சுவீகரிப்பதற்காக, இரு அணிகளின் வீரர்களும், தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.