சர்வதேசத்தை தட்டி எழுப்பும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் மன்னார் மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொள்ளும் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி மன்னாரில் இடம்பெற்று வருகிறது.

குறித்த போராட்டம் இலங்கையில் தமிழர் மீது கடந்த காலங்களிலும் தற்போதும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் திட்டமிட்ட இனப்படுகொலையைக் கண்டித்து நடை பெற்று வருகிறது. 

தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதி கேட்டு நடாத்தப்படும் போராட்டக்காரர்களின் குரல்கள் சர்வதேச நாடுகளுக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் கேட்குமா? 

தமிழ் மக்கள் விழித்துக்கொள்வார்களா? என்பதே இப் போராட்டத்தின் நோக்கமாக உள்ளது.

போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேசத்திடம் முன்வைக்கும் கோரிக்கை அறிக்கை வடிவில் கீழுள்ளது.

நிகழ்வுகளின் நேரலை இணைப்புக்கள் கீழுள்ளன.

இதேவேளை, காணாமல் போயுள்ள தங்களது உறவினர்களின் நிலைமை குறித்து தகவல் இன்றி இலங்கை முழுவதிலும் உள்ள காணாமல் போனோரின் உறவினர்கள் தொடர்ந்தும் துன்பமடைந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச காணாமல் போனார் தினத்தை முன்னிட்டு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுத மோதல்கள் மற்றும் அதற்கு பின்னரான வன்முறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனோர் உயிருடன் இருக்கின்றார்களா? அல்லது இறந்து விடடார்களா? என்று தெளிவற்ற நிலையில் வாழும் அவர்களது குடும்பங்களுக்கு அது வேதனையையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது.

காணாமல் போயுள்ள தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவது மிகவும் அவசியமான தேவையாகும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

Files