அஸ்வெசும நிவாரண நிதி வழங்கி வைப்பு : பெற்றுக்கொண்டவர்கள் மகிழ்ச்சி - முடியாதவர்கள் கவலை! (Photos)

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டு அஸ்வெசும நிவாரண கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதற்காக இன்று (30) பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கூடியிருந்தனர்.

அஸ்வெசும நிவாரண நிதி  வழங்கி வைப்பு :  பெற்றுக்கொண்டவர்கள் மகிழ்ச்சி - முடியாதவர்கள் கவலை! (Photos)

இந்த நிவாரணக்கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதற்காக பௌர்ணமி தினமான இன்று (30) ம் திகதி ஹட்டன் நகரில் உள்ள அரச வங்கிகள் திறக்கப்பட்டிருந்தன.

எனினும் தேசிய சேமிப்பு வங்கி மாத்திரம் பூட்டப்பட்டிருந்ததனால் அந்த வங்கியில் நிவாரண கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இதே வேளை, வங்கிகளில் அஸ்வெசும கொடுப்பனவுககளை பெற்றவர்கள் மகிழ்ச்சியில் சென்றதுடன் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவித்தனர்.

ஒரு சிலர் வங்கிகளில் காத்திருந்து காசு கிடைக்காததனால் கவலைத் தெரிவித்தனர்.

இது குறித்து ஒரு சிலர் கருத்து தெரிவிக்கையில் நேற்றைய தினம் அரச வங்கிகள் திறக்கப்பட்டு கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்கள் அதற்கமைய நாங்கள் காலை முதல் காத்திருக்கிறேன். ஆனால் தேசிய சேமிப்பு வங்கி திறக்கப்படவில்லை. திறக்கப்படாவிட்டால் முன்கூட்டி அறிவித்திருந்தால் நாங்கள வந்திருக்க மாட்டோம். சிலர் வேலைக்கு செல்லாது தங்களது பெற்றோர்களை அல்லது உறவினர்களை அழைத்து வந்துள்ளனர். இதனால் எத்தனை பேர் இதற்காக அலைந்து திரிய வேண்டி உள்ளது.

 இன்னுமொருவர் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் மிகவும் தூரமிருந்து கஸ்டத்திற்கு மத்தியில் வந்தோம்.

 ஆனால் இங்கு பாரத்த போது காசு வரவில்லை வேறு ஒரு நாளைக்கு வந்து பாருங்கள் என்று தெரிவிக்கிறார்கள். வரும் காசினை பேருந்திற்கே செலவு செய்ய வேண்டி வருமோ தெரியவில்லை என தெரிவித்தார்.

எவ்வாறான போதிலும் மலையகத்தில் அஸ்வெசும நிவாரணம் திட்டம் பெரும் பகுதியினருக்கு கிடைத்திருக்க வேண்டிய நிலையில் குறிப்பாக வேலையற்று எவ்வித வருமானமும் இன்றி கஸ்டபடும் குடுபங்களுக்கு கிடைக்கவில்லை என்பதும். அதேநேரம் தொழில் புரியும் பலரது குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதே.

 எனவே இது குறித்தும் அரசாங்கம் கவனமெடுத்து நியாயமாக கிடைக்க வேண்டியவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அனைவரும் கோரிக்கை விடுக்கின்றனர்.