துருக்கிய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய திட்டம்?
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் துருக்கிய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள், துருக்கிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் சர்வதேச பயிற்சி திட்டத்தில் பங்கேற்றல் உட்பட பல பயிற்சி திட்டங்களுக்கான வாய்ப்பை பெறவுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு அனுமதி கோரி பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான யோசனை முன்வைத்திருந்தார்.
இந்தநிலையில், குறித்த யோசனைக்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.