பாடசாலைகள் ஆரம்பம் மற்றும் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்!

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை (24) ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி மே 03 ஆம் திகதி வரை இந்த கட்டம் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை மே 20 ஆம் திகதி தொடங்க உள்ளது.
இதனிடையே, கல்விப் பொதுத் தராதர 2023/2024 சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.