வௌ்ள ஆபத்தற்ற சில பாடசாலைகள் திறப்பு - அபாயமுள்ளவை மூடப்படும்!

வௌ்ள ஆபத்தற்ற சில பாடசாலைகள் திறப்பு - அபாயமுள்ளவை மூடப்படும்!

இலங்கையில் வெள்ள ஆபத்தற்ற மேல் மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை நாளை (05) முதல் ஆரம்பிக்குமாறு, மேல் மாகாண பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண ஆளுநரினால், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் இவ்வாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (5) மூடப்படும் என மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், இரத்தினபுரி, நிவித்திகல, எலப்பாத்த, அயகம கல்வி வலயங்களின் பாடசாலைகள் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.