பேருந்து விபத்தில் மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது!

கொத்மலை, ரம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த நிலையில், மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், கம்பளை ஆதார மருத்துவமனையில் இருந்து பேராதனை போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட மூன்று குழந்தைகளில் ஒன்றான ஆறு மாத குழந்தை தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக பேராதனை போதனா மருத்துவமனையின் இயக்குநர் ஏ.எம்.எஸ் வீரபண்டார தெரிவித்தார்.
கம்பளை மருத்துவமனையில் இருந்து ஆறு மாத குழந்தை, ஆறு மற்றும் 11 வயதுடைய இரண்டு குழந்தைகள் தனது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.