மீண்டும் ஒரு நீதியரசர் பதவி விலகல் - சட்டவிரோத மத வழிபாட்டுத் தலங்கள் விவகாரம்!
மலை உச்சிகளில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்படும் மத வழிபாட்டுத் தலங்கள் காரணமாக ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுபாட்டைத் தடுப்பதற்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து வந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரொருவர் பதவி விலகியுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாமான எஸ்.யு.பி. கரலியத்த மற்றும் மாயாதுன்னே கோரயா ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு பரிசீலனைக்கு வந்தது.
இதன்போது, தனிப்பட்ட காரணங்களால் குறித்த வழக்கிலிருந்து தாம் விலகுவதாக நீதியரசர் எஸ்.யு.பி. கரலியத்த அறிவித்துள்ளார்.
சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையம் சமர்ப்பித்துள்ள இந்த மனுவை, புதிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.