காணாமல் போன நீதிமன்ற வழக்கு ஆவணத்துடன் தொடர்புடையவர் கைது!
கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து காணாமல்போன வழக்கு ஆவணமொன்றுடன் தொடர்புடைய சந்தேகநபரை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போயுள்ள ஆவணத்துடன் தொடர்புடையவருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக, போலி கடிதமொன்றை குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளரும் அண்மையில் கைதானார்.
இதனையடுத்து, அவர் கொழும்பு – புதுக்கடை 7 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
போலி கடிதம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வழக்குடன் தொடர்புடைய ஆவணம் காணாமல் போயுள்ளமை தெரியவந்தது.
இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு பொறுப்பான அதிகாரியிடம் வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் கடந்த 13ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.