காசாவிலிருந்து வெளியேற 17 இலங்கையர்களுக்கும் அனுமதி!
எகிப்தின் ரஃபா எல்லையின் ஊடாக காசாவிலிருந்து வெளியேற 17 இலங்கையர்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட 596 பேர் இன்று (02) காசாவை விட்டு வெளியேற அனுமதி பெற்றுள்ளனர்.
அவர்களில் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் காயமடைந்தவர்களும் உள்ளடக்குகின்றனர்.
சுமார் மூன்று வாரங்களுக்கு பின்னர் அனுமதி பெற்ற அனைவரும் வெளியேறுவதற்காக, இன்று எகிப்தின் ரஃபா எல்லை திறக்கப்படுகிறது.
குறித்த 596 வெளிநாட்டு மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட பிரஜைகளில் 17 இலங்கையர்கள் இன்று எகிப்தை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
காசாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகமும், பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதிகளும் இணைந்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.