மனித பாவனைக்கு உட்படுத்த முடியாத பெருந்தொகை உணவு பொருட்கள் பறிமுதல்!
கொழும்பு- முகத்துவாரம் பகுதியில் மனித பாவனைக்கு உட்படுத்த முடியாத வகையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருந்தொகை உணவு பொருட்களை
கொழும்பு- முகத்துவாரம் பகுதியில் மனித பாவனைக்கு உட்படுத்த முடியாத வகையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருந்தொகை உணவு பொருட்களை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு களஞ்சியசாலையும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது 35,000 கிலோகிராம் தரமற்ற சீனி, 15,000 கிலோகிராம் தரமற்ற சவ் அரிசி மற்றும் ஒரு தொகை அப்பலம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் பயன்பாட்டுக்கு உதவாத ஒரு தொகை உப்பும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் களஞ்சியசாலையின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.