பம்பலப்பிட்டிய ரயில் நிலைய மேம்பாலத்தின் நிலைமை - கொழும்பில் மீண்டும் அசம்பாவிதம் வேண்டாம்!
பம்பலப்பிட்டிய ரயில் நிலைய மேம்பாலத்தின் நிலைமை அந்த பகுதியில் பயணிப்பவர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பம்பலப்பிட்டிய ரயில் நிலைய மேம்பாலத்தின் நிலைமை அந்த பகுதியில் பயணிப்பவர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
கொழும்பில் இதுவரை இடம்பெறாத வகையில் அண்மையில் பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்து ஐந்து உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
அவ்வாறான அசம்பாவிதம் ஒன்று மீண்டும் ஏற்படக் கூடாது என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.
இந்த நிலையில் பம்பலப்பிட்டிய ரயில் மேம்பலத்தின் வெடிப்புகள் அவதானிக்கப்பட்டு அந்த பகுதியில் பயணித்த ஒருவரினால் படம் பிடிக்கப்பட்டு எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு உதாரணம் மாத்திரமே, பழைமையான ரயில் நிலையங்கள் மற்றும் கட்டிடங்களும் அசாதாரண காலநிலை மற்றும் காலத்தால் அழிவடையக் கூடிய சாத்தியம் உள்ளது.
குறிப்பாக பொது நிதியில் பராமரிக்கப்படும் இவ்வாறான இடங்கள் உரிய அதிகாரிகளின் நேரடி கவனத்திற்கு வருவதில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது.
எப்போதும் கவனமாக இருங்கள். அடுத்து என்ன நடக்கும் என்பதை நாம் கற்பனை செய்வது கடினம் என்பதால்... அவதானமாக செல்லுங்கள்.
நீங்கள் உங்கள் குடும்பத்திலிருந்து பணிக்குச் செல்லும் ஒரே ஊழியராக இருந்தால், உங்களின் வருகைக்காக அன்புக்குரியவர்கள் காத்திருக்கக் கூடும்!
அதிகாரிகளே, மக்கள் பிரதிநிதி எனப்படும் அரசியல்வாதிகளோ, திணைக்கள அதிகாரிகளே இதுபற்றி சிந்திக்கப் போவதில்லை.