பொலிஸ் உத்தியோகத்தர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

பொலிஸ் உத்தியோகத்தர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

போதைப்பொருள் தடுப்பு சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேக நபரின் கூரிய ஆயுதத் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (15) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கல்கிஸை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த உத்தியோகத்தர் படேவிட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என்பதுடன், அந்த பதவியின் நிலையத் தளபதியுடன் இணைந்து நேற்று (15) மாலை பகுதிக்கு போதைப்பொருள் தடுப்பு சோதனைக்கு சென்றுள்ளார்.

இந்த சோதனையில் அவர், போதைப்பொருள் வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது சந்தேக நபர் கையில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் அதிகாரியின் வயிறு மற்றும் முழங்கை பகுதியில் தாக்கியுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தப்பிச் சென்றதுடன், காயங்களுக்கு உள்ளான அதிகாரி களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு தற்போது சிறையில் உள்ள வெலே சுதா எனப்படும் சமந்தகுமாரவின் சகோதரர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அதேநேரம், தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.