மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிகை விடுத்துள்ளது.
மேற்குறித்த கடற்பரப்பு அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் கடல் அலைகளின் உயரம் 2.5 – 3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் உள்ளதாகவும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்பிற்க்கும் ஏனைய நடவடிக்கைகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் கடற்றொழில் சமூகங்களுக்கு அறிவித்துள்ளது.