ஜனாதிபதி அநுரவிற்கு பிரமாண்ட வரவேற்பு!
மூன்று நாள் அரச விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை இடம்பெற்றிருந்தது.
குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் கலந்து கொண்டனர்.