பலாங்கொடை பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு!

பலாங்கொடை பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு!

பலாங்கொடை கதிர்காமம் வீதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பலாங்கொடை கதிர்காமம் பிரதான வீதியில் வேலிஓயா ஹம்பேகமுவ இடைப்பட்ட பகுதியில் கொட்டவேஹரமங்கட பிரதேசத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் இப்பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு ஹம்பேகமுவ காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று மாலை 7.15 மணியளவில் குறித்த யானை வீதியில் சென்றுள்ளது. இந்த விடயம் குறித்து பிரதேச மக்கள் தெரிவிக்கையில்,

பலாங்கொடை கதிர்காமம் வீதியில் கொட்டவேஹரமங்கட அழுத் வெவ பகுதியில் தினமும் மாலை நேரத்திலும் இரவு வேளையிலும் யானைகள் தினமும் நடமாடுவதால் தாம் பாரிய அச்சத்துடன் வாழ்வதாகவும் இரவு வேளைகளில் தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

பலாங்கொடை அழுத்வெவ தங்வல்ஓடை பிரதேசத்தில் காட்டு யானைகள் கூட்டம் ஒன்று பிரதேசத்தில் உள்ள விவாசாய நிலங்களுக்கு உட்புகுந்து தென்னை வாழை மரங்களை பாரிய அளவில் சேதப்படுத்தி உள்ளது.இதன் காரணமாக பிரதேச விவசாயிகள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக உடவலவ காட்டுப்பகுதியில் இருந்து வருகை தந்தகாட்டு யானைகள் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த காட்டு யானைகளிடமிருந்து உயிர்களையும் விவசாய நிலங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச மக்கள் இரவு பகலாக காவல் பார்த்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.