முதியோர் கொடுப்பனவு குறித்து மகிழ்ச்சியான செய்தி!

அஸ்வெசும பயனாளிகள் குடும்பங்களில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்காக அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் 3,000 ரூபாய் கொடுப்பனவு தற்போதைய நிலையில் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் மாதத்துடன் தொடர்புடைய பணம் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இன்று (22) முதல் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும திட்டத்தின் கீழ் 511,086 பேருக்கு இந்தக் கொடுப்பனவு பெற்றுக் கொடுக்கப்படுகின்ற நிலையில், இம்மாதத்திற்காக 1,533,258,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.