16ஆம் திகதிக்கான வானிலை விசேட  முன்னறிவிப்பு!

16ஆம் திகதிக்கான வானிலை விசேட  முன்னறிவிப்பு!

இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் இன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு:

2024 டிசம்பர் 16ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

விசேட அறிவித்தல்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது மேலும் வலுவடைந்து அடுத்த இரண்டு நாட்களில் இலங்கையின் வடக்குப் பகுதியை அண்டியதாக தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுமக்கள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்கள் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.