தெதுறு ஓயா அவசர கதவுகள் திறப்பு - பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை!
அதிக மழை காரணமாக தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

நீர்ப்பாசன திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நான்கு வான்கதவுகள் நான்கு அடி உயரத்திலும், ஏனைய நான்கு வான்கதவுகள் தலா இரண்டு அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக, நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம்; அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், நில்வளா கங்கையை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.