நான் கூறியது எதுவுமே இதுவரை தவறாகவில்லை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இதுவரை நான் கூறியது எதுவும் தவறாகவில்லை.

 2019 இல் தோற்றாலும் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கிய துவாய் குறித்து பேசினேன்.

ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டில் இது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு, பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு இந்த வசதிகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர். 

அரசியல் பொறாமையை மையமாக வைத்து தேர்தல் வருடத்தில் மாத்திரம் இதனை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தினால் முக்கியமானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதாவது இந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி செயற்பட வேண்டும்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். 

வீசா வழங்கும் நடைமுறைமையில் நடந்துள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து கடந்த வாரம் சுட்டிக்காட்டினேன். 

அரசியல் ஆதாயத்துக்காக தாம் கூறிய கருத்து தவறானது என அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் கூறினர்.

ஆனால் தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்த விடயம் இன்று யதார்த்தமாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தான் சொல்வதைக் கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியுமாக இருந்திருக்கும். 

ஆனால் அரசியல் பொறாமைத்தனத்தால் அவ்வாறு செய்யாது விட்டனர். 

தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை கைவிட தீர்மானம் எடுத்துள்ளனர். 

இதே வழியில், கோவிட் ஆரம்ப காலப்பிரிவிலே முகக்கவசம், கோவிட் தடுப்பூசி, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நல்ல முன்மொழிவுகளை முன்வைத்த போது எனக்கு எதிராக சேறு பூசினர்.

என்ன நடந்தது, இறுதியில் உண்மை வென்றது. 

தாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 171 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் கம்பஹா, தொம்பே, தங்கல்ல தர்மராஜ மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 03 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலையின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுக்களுக்கு ஆடைகள் கொள்வனவு செய்வதற்காக ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரிடம் வழங்கி வைத்தார்.

எல்லாக் கதைகளும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காது உண்மை, தரவு மற்றும் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு சொல்லப்பட்டவையாகும். 

தான் ஒருபோதும் தேவையில்லாத விடயங்களை கூறி வெறும் வாய்ச் சொல் தலைவராக இருக்க முயற்சித்ததில்லை. 

சொன்னதைச் செய்பவனாக, செய்வதை சொல்பவனாக இருக்கும் தலைவனாக இருப்பேன். 

நாட்டுக்கு தேவை வெறும் வாய் பேச்சுத் தலைவர் அல்ல, நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்லும் செயல் ரீதியிலான தலைவரே தேவை. 

அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

 எதிர்க்கட்சியிலிருந்து கொண்டே நாம் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தினோம்.

மக்கள் கோரும் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த அதிகாரம் தேவை என கேட்பவர்கள் எமது பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களை பார்த்து தெரிந்து கொள்ளட்டும். 

இந்த இரண்டு திட்டங்களும் அதிகாரம் இல்லாமலே முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டு வரப்பட்டவை.

அதுமட்டுமின்றி, எந்தவித அதிகாரங்களும் இன்றியே ஐக்கிய மக்கள் சக்தி திருடர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்தது. 

இதுவும் முறைமையில் ஏற்படுத்திய ஒரு பெரிய மாற்றமாகும். 

எனவே, முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்க அதிகாரம் தேவையில்லை.

அர்ப்பணிப்புதான் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதிகாரத்தைப் பெறுவதற்கு முன் பணியாற்றுங்கள், உங்கள் திறனை, உங்கள் திட்டத்தை முன்வையுங்கள். ஐக்கிய மக்கள் சக்தி யதார்த்தமாக செயற்படும் ஓர் அரசியல் கட்சியாகும். 

இந்த வகையில் ஐக்கிய மக்கள்

சக்திக்கு பெரும் அபிமானம் உண்டு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.