தமிழ் ஊடகவியலாளர்களை ஜனாதிபதி புறக்கணிப்பது ஏன்?
இலங்கையில் எல்லா மாவட்டங்களிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் 600க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை நேற்று (06) பிற்பகல் இலங்கை ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள விருந்தகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலில் பங்குகொண்ட ஊடகவியலாளர்களின்
பிரச்சினைகளை எழுத்து மூலம் தரும்படியும் கூறி இருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக நடந்துகொண்டு இருக்கும் பொலிசாரின் அச்சுறுத்தல்கள் மற்றும் சிவில் உடையில் நடமாடும் புலனாய்வாளர்களின் மிரட்டல்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் மிரட்டல்கள் இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி கடிதம் மூலம் கையளிப்பதற்கு வலியுறுத்தியிருந்தார்.
எனவே ஜனாதிபதி சந்திப்பதற்கு முன் அனைவரையும் இலத்திரனியல் உபகரணம் மூலம் பரிசோதனை செய்த போது தமிழ் ஊடகவியலாளர்கள்
வைத்திருந்த கடிதங்கள் அனைத்தையும் பெற்று தாங்கள் கொடுப்பதாக கூறினார்கள்.
ஆனால், சிங்கள ஊடகவியளாலர்களின் கடிதங்களை வாங்காமல்
அவர்களே ஜனாதிபதியிடம் நேரடியாக கையளித்தமையை காணக்கூடியதாக இருந்தது.
எனவே, இந்தவிடயத்தில் கூட தமிழ் ஊடகவியளாலர்களை புறக்கணித்தமை
காணக்கூடியதாக இருந்தது.
ஜனாதிபதியின் உரை முடிந்தவுடன் மேடையில் இருந்து இறங்கியும் சென்றமை குறிப்பிடதக்கது
எனவே நீன்டகாலமாக உள்ள தமிழ் ஊடகவியலாளர்களின்
பிரச்சினைக்கு எந்த ஜனாதிபதியும் தீர்வு கொடுக்க தயாரில்லை என்பதே உண்மை.