தேசிய நாயகனாகப் போற்றப்பட்ட மஹிந்தர் அரசியல் களத்திலிருந்து காணாமல் போக காரணம் என்ன? - ஒரு மீள்பார்வை!

இலங்கையில் தேசிய நாயகனாகப் போற்றப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ  இன்று அரசியல் களத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளார் அல்லது காணாமல் போயுள்ளார் என்றே கூற வேண்டும் .

தேசிய நாயகனாகப் போற்றப்பட்ட மஹிந்தர் அரசியல் களத்திலிருந்து காணாமல் போக காரணம் என்ன? - ஒரு மீள்பார்வை!

இலங்கையில் தேசிய நாயகனாகப் போற்றப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ  இன்று அரசியல் களத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளார் அல்லது காணாமல் போயுள்ளார் என்றே கூற வேண்டும் .

இந்திய நாளிதழான தி பயனியரின் ஊடகவியலாளர் ஒருவர் தனது மீள்பார்வையையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு, தாம்  முதன் முறையாக பாதுகாப்பு கருத்தரங்கு ஒன்றுக்காக இலங்கைக்கு பயணித்த போது, கண்ட காட்சிகளை அவர் விபரித்துள்ளார்.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து தலை நகருக்குச் செல்லும் பாதை நெடுகிலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றமைக்காக, எந்த இடத்தையும்  விட்டுவைக்காத வகையில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

அத்துடன் இரண்டு நாட்கள் நீடித்த இந்த கருத்தரங்கு முழுவதும், சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் மஹிந்த ராஜபக்ஷ மீது புகழைப்  பொழிவதில் பரஸ்பரம் போட்டியிட்டனர்.

ஜனாதிபதி ராஜபக்ஷவின் தத்துவமான “மஹிந்த சிந்தனை” நாடு முழுவதும் பேசப்பட்டது.

இதுவே, மகிந்த ராஜபக்ஷவை முன்கூட்டிய வாக்கெடுப்புக்கு செல்லத் தூண்டியது.

கருத்துக் கணிப்பாளர்களும்  ராஜபக்ஷவே வெற்றி பெறுவார் என்று முன்னறிவித்தனர் 

ஆனால் முடிவு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது. ராஜபக்ஷர்களை எதிர்த்து போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார்.

இந்தநிலையில், 2016ஆம் ஆண்டு தமது  இரண்டாவது இலங்கைப் பயணத்தின் போது மஹிந்த ராஜபக்ஷவின் படங்களை எங்கும் பார்க்கவில்லை.

"மஹிந்த சிந்தனை"யில் சொற்பொழிவு செய்தவர்களைக் காணவில்லை. 
மஹிந்தவோ அவரின் சிந்தனையோ இலங்கையில் இருக்கவில்லை.

அரண்மனை ஆலோசகர்களின் வார்த்தைகளைப் பின்பற்றும் ஆட்சியாளர்கள் சில நாட்களில் மறைந்து விடுகிறார்கள் என்று பண்டைய கேரளக் கவிஞரான பூந்தனத்தின் கவிதைப் படைப்பான ஞானப்பனாவின் கூற்றுப்படி. “இறைவன் விரும்பினால், ஒரு அரசன் பிச்சைக்காரனாக முடியும்” என்ற கூற்றை, தி பயனியர் நாளிதழின் செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.