ராகுல் காந்தியின் சர்ச்சை கருத்து - சிரோமணி அகாலி தளம் மற்றும் பாரதீய ஜனதாக்கட்சி கடும் விமர்சனம்!
சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக் தேவ், மக்கா, தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு சென்றதாக கூறிய, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்காக சிரோமணி அகாலி தளம் மற்றும் பாரதீய ஜனதாக்க7ட்சி என்பன கடும் விமர்சனங்களை வெளியிyy7ட்டுள்ளன
சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக் தேவ், மக்கா, தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு சென்றதாக கூறிய, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்காக சிரோமணி அகாலி தளம் மற்றும் பாரதீய ஜனதாக்கட்சி என்பன கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளன
அமெரிக்காவில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் உரையாற்றும் போது ராகுல் காந்தி இந்த தகவல்களை தெரிவித்திருந்தார்.
கலிபோர்னியா உரையாற்றிய அவர், இந்தியாவில் மட்டுமல்ல, பாரத் ஜோடோ என்பது உங்கள் அனைவரின் இதயங்களிலும் இருக்கும் ஒரு யோசனையாகும் என்று குறிப்பிட்டார்.
ஒருவருக்கொருவர் வன்முறையில் ஈடுபடாமல் இருப்பது, கர்வம் கொள்ளாமல் இருப்பது என்ற விடயங்களை சீக்கிய மத நிறுவுனர் குருநானக் ஜி, போதித்தார்.
குருநானக் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா வரை சென்றுள்ளார்... தாய்லாந்து சென்றுள்ளார்... இலங்கை சென்றுள்ளார் என்று எங்கோ தாம் படித்ததாக குறிப்பிட்ட ராகுல் காந்தி இதன்போது குறிப்பிட்டார்.
இந்தநிலையில் பாரதீய ஜனதாக்கட்சியின் தேசிய பேச்சாளர்; ஆர்பி சிங் தமது ட்விட்டரில், கலிபோர்னியாவில் ராகுல் காந்தியின் அறிக்கையால் தாம்; மிகவும் வேதனையடைந்தேன் மற்றும் திகைத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்
ஷிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தமது ட்விட்டரில், ராகுல் காந்தி தனக்கு அறிவும் புரிதலும் இல்லாத விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஸ்ரீ குரு நானக் தேவ் ஜியின் தரிசனம் புவியியல் எல்லைகளைத் தாண்டியது என்பதும், உலகளாவியது மட்டுமல்ல, பிரபஞ்சமானதும் அதன் வரம்பில் உள்ளது என்பதும் ராகுல் காந்திக்கு தெளிவாகத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்