அரசியல் பிழைப்புக்காக மீண்டும் இன, மத மோதல்களை தூண்ட முயற்சி - அனுரகுமார காட்டம்
இலங்கை அரசாங்கம் தனது அரசியல் பிழைப்புக்காக நாட்டில் மீண்டும் இன, மத மோதல்களை தூண்ட முயற்சிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தனது அரசியல் பிழைப்புக்காக நாட்டில் மீண்டும் இன, மத மோதல்களை தூண்ட முயற்சிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
75 வருடங்களாக நாட்டை அழித்த ஆட்சியாளர்களுக்கு எதிராக அடிமட்ட சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், அனைத்து சமூகங்களினதும் ஒற்றுமையால், அச்சமடைந்த ஆட்சியாளர்கள் தற்போது மீண்டும் அவர்களை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆட்சியாளர்கள் மக்களை வடக்கு, தெற்கு என பிரித்துவிட்டு, மீண்டும் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அவர்களை பிரிக்க முயற்சிக்கின்றனர் என்றும் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.