காலிமுகத்திடல் போராட்டம் - அடிப்படை மனித உரிமைமீறல் மனு தள்ளுபடி!

2022ம் ஆண்டு மே 9ம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க பொலிஸார் முறையான நடவடிக்கை எடுக்காததன் காரணமாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று (19) தள்ளுபடி செய்துள்ளது.

காலி முகத்திடல் உட்பட நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குறித்த வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறி, Right to Live அமைப்பு தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள்  மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு தொடர்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்ரம முன்வைத்த அடிப்படை ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் மனுவை விசாரணையின்றி நிராகரித்துள்ளது.

நீதியரசர்களான எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.