போலி விசாக்கள் மூலம் போலாந்துக்கு செல்ல முயற்சித்தவர்கள் கைது

போலி விசாக்கள் மூலம் போலாந்துக்கு செல்ல முயற்சித்தவர்கள் கைது

போலி விசாக்களைப் பயன்படுத்தி போலந்து நாட்டுக்குச் செல்ல முயன்ற இரண்டு நபர்களை கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நேற்றைய (ஏப்ரல் 30) தினம் கட்டார் வழியாக போலந்துக்கு பயணிக்க முயன்ற இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைதான சந்கேத நபர்கள் 31 மற்றும் 38 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் தெமோதரை மற்றும் பெலிகல (Beligala) பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று (01) நீர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.