நிவாரணத்தினால் வட்டி  வீதம் குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு!

நிவாரணத்தினால் வட்டி  வீதம் குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு!

மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் ஆகியன ஒருங்கிணைந்து மேற்கொண்ட நுண் பொருளாதார கேள்வி முகாமைத்துவ முன்முயற்சியின் காரணமாக 2022 செப்டம்பர் மாதத்தில் 70% ஆக இருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரி மாதத்தில் 5.9% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சிறு மற்றும் மத்திய தொழில் முயற்சியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்கி 30 வீதத்தை தாண்டிய வட்டி வீதத்தை 2023 இல் 10 சதவீதத்தை விட குறைவான தொகைக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.