உச்சம் தொடும் சூரியன் சில இடங்களில் இன்று கடல் கொந்தளிப்பு

உச்சம் தொடும் சூரியன் சில இடங்களில் இன்று கடல் கொந்தளிப்பு

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இம்மாதம் 14 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராகச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று நண்பகல் 12.11 அளவில் ஹத்திகுச்சி, கலங்குட்டிய, ஹல்மில்லேவ, இபலோகம, பலுகஸ்வெவ, ஹபரணை ஆகிய பகுதிகளுக்கு நேராகச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது

இதேவேளை,தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கடல் பகுதியில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை நிலையம் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரித்துள்ளது.

மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு – மத்திய வங்கக் கடலில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.பலத்த காற்று அதன்பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்காள விரிகுடாவில் படிப்படியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது.