வைத்தியசாலையில் மேர்வின் சில்வா அனுமதி - சிறைச்சாலையில் சம்பவம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உடல் நலக்குறைவு காரணமாக மகர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறு இருப்பினும் மேர்வின் சில்வாவிற்கு எந்தவிதமான மேலதிக வசதிகளும் வழங்கப்படாது எனவும் காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவருடைய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.