போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த 21ஆம் திகதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

இதனையடுத்து அவரது உடல், ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் உள்ள கல்லறை ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரோம் மட்டுமின்றி இத்தாலி முழுவதிலும் இருந்து ஏராளமானோர் போப் பிரான்சிஸின் கல்லறையை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து அடுத்த போப் யார் என்ற எதிர்பார்ப்புடன் கிறிஸ்தவ மக்கள் காத்திருக்கின்றனர்.

 வத்திக்கானின் தலைமை பீடத்தில் பெரும்பாலும் ஐரோப்பிய போப் ஆண்டவர்களே அதிகாரம் செலுத்தி வந்துள்ள நிலையில், இதுவரை ஆப்பிரிக்க கறுப்பினத்தவர் யாரும் போப் ஆனதில்லை என்பதால் பீட்டர் டர்க்சன் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

ஆனாலும் பெரும்பாலான ஐரோப்பிய, அமெரிக்க கார்டினல்களின் ஆதரவு இத்தாலியை சேர்ந்த பியட்ரோ பரோலினுக்குதான் இருப்பதாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.