செயற்கை நுண்ணறிவை பயன்படுத்திய முதல் தமிழ் ஊடகம் Geneva Times!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial Inteligence) பயன்படுத்தி மே மாதம் 08ஆம் திகதி இரவு செய்தி அறிக்கையை தமிழ் பேசும் மக்களுக்கு Geneva Times வழங்கியது.   

ஊடகவியலாளரும் செய்தி அறிவிப்பாளருமாகிய S.D.M. சஹ்ரான், செயற்கை நுண்ணறிவு (A.I) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.  

உலகில் தமிழ் மொழியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி செய்தி ஒளிபரப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இன்று உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (AI) தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊடகத்துறையில் இவ்வாறானதொரு முயற்சி பற்றி பலராலும் பேசப்பட்டுவருகிறது.