அமெரிக்காவில் குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை!

அமெரிக்காவில் குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை!

அமெரிக்காவில் குறைந்துவரும் குழந்தை பிறப்பை அதிகரிக்கும் விதமாக ஊக்கத்தொகை வழங்குவது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலனை செய்து வருகிறது.

அமெரிக்காவில் 1990களுக்கு பிறகு, குழந்தை பிறப்பு கணிசமாக குறைந்து காணப்படுகிறது.இப் பிரச்னை பெரிய பிரச்னையாக மாறும் என துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் எச்சரித்துள்ளார். அத்துடன் குழந்தை பெற்றுக்கொள்வதை அதிகரிக்க செய்ய வேண்டும் என எலான் மஸ்க்கும் கூறி வருகின்றார்.

இந்நிலையில், பெண்கள் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க புதிய திட்டம் ஒன்றை அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வரும் அதிகாரிகள், குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர் ஊக்கத்தொகை வழங்குவது குறித்தும் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அமெரிக்கா அளித்து வரும் ‘ஸ்காலர்ஷிப்’ திட்டத்தில், திருமணமாகி குழந்தை உள்ளவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவும் அதிகாரிகள் பரிசீலனை செய்வதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.