ஈரான் சக்திவாய்ந்த 500க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்யாவிற்கு வழங்கியது!
ஈரான் சக்திவாய்ந்த பல புதிய ஏவுகணைகளை ரஷ்யாவிற்கு வழங்கியுள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிடம் இருந்து சுமார் 400 ஏவுகணைகளை வழங்கும் நடவடிக்கையின் கீழ் பல ஃபதே-110 ரக ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இது சுமார் 300 முதல் 700 கிலோமீற்றர் வரையிலான தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் ஈரான் பதிலளிக்க மறுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.