X or Twitter செயலியின் தலைவர் சமிரன் குப்தா பதவி விலகல்!

டெஸ்லா நிறுவுனரும், எக்ஸ் எனும் டுவிட்டர் வலைத்தளத்தை வலுக்கட்டாயமாக கொள்வனவு செய்தவருமான எலான் மஸ்கின் நிர்வாகத்தில் இருந்து எக்ஸ் செயலியின் இந்திய மற்றும் தெற்காசியாவுக்கான கொள்கைப் பரப்பு தலைவர் பதவியில் இருந்து சமிரன் குப்தா பதவி விலகியுள்ளார்.

X or Twitter செயலியின் தலைவர் சமிரன் குப்தா பதவி விலகல்!

எக்ஸ் நிறுவனத்திலிருந்து சமிரன் குப்தாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ள தருணத்தில் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார். 

தெற்காசியாவில் சீனாவுக்கு அடுத்து அதிக சனத்தொகை கொண்ட இந்தியாவில் தற்போது எக்ஸ் செயலியை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 27 மில்லியனாக உள்ளது.

கடந்த வாரம் எக்ஸ் நிறுவன தலைவர் ஈலோன் மஸ்க், எக்ஸ் செயலி பயனாளர்களிடம் இருந்து படங்களை பதிவேற்ற கட்டணம் அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டிருந்திருந்தார்.

இந்த நடவடிக்கை பெரும்பாலான எக்ஸ் வலைத்தள பயனாளர்களை பின்வாங்கச் செய்துள்ளதாக தெரிகிறது.

எதிர்காலத்தில் எக்ஸ் எனப்படும் டுவிட்டர் பயனாளர்கள் பேஸ்புக் நிறுவனத்தின் த்ரட்ஸ் தளத்தை நாடக் கூடும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.