ஐம்பது ஆயிரம் மில்லியன் திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை!
50,000 ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 26ஆம் திகதி ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
50,000 ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 26ஆம் திகதி ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,
182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,
364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.