பல இடங்களில் கோழி இறைச்சி - முட்டை விலை குறைந்தது!

பல இடங்களில் கோழி இறைச்சி - முட்டை விலை குறைந்தது!

சாதாரண தரத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் மொத்த விலை 750 ரூபாயாகவும், முட்டை ஒன்றின் மொத்த விற்பனை விலை 28 மற்றும் 29 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

ஆனால் சில பிரதேசங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 900 முதல் 1100 ரூபாய் வரை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சில பகுதிகளில் ஒரு முட்டை 40 ரூபாய்க்கும், சிறிய முட்டை 32 ரூபாய் முதல் 35 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

700 முதல் 800 ரூபா வரை மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை நாளாந்தம் கோழி இறைச்சியின் தேவையின் காரணமாக சில இடங்களில் அதை விடவும்  குறைந்துள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாளாந்த முட்டை தேவையை விட அதிகளவு முட்டை கையிருப்பு கிடைப்பதால் வெள்ளை முட்டை ஒன்றின் மொத்த விலை 28 ரூபாயாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் மொத்த விற்பனை விலை 29 ரூபாயாகவும் குறைந்துள்ளதாக, முட்டை மொத்த வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.