முட்டை விலை குறைவடைந்துள்ளது - அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம்!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் அறிக்கையின்படி இன்று கபில நிற முட்டை ஒன்றின் விலை 36 ரூபாய்.
இதேவேளை, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 35 ரூபாயாக பதிவாகியுள்ளது என அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.