5000 ரூபாயை தொட்டது இஞ்சியின் விலை!
ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 5,000 ரூபாயை எட்டியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 4,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, ஒரு கிலோ கிராம் போஞ்சியின் விலை 700 ரூபாயாகவும், ஒரு கிலோ கிராம் எலுமிச்சையின் விலை 1,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.