காசா மோதலால் உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
காசா பகுதியில் நிலவும் மோதல் காரணமாக உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.
இதனால் இலங்கையிலும் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எரிவாயு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 500 ரூபாவால் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.
இறுதியாக கடந்த 5ஆம் திகதி எரிவாயு விலை திருத்தப்பட்டது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 343 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு தற்போது 3 ஆயிரத்து 470 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு தற்போது 3 ஆயிரத்து 985 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.