சீனாவில் வெடி விபத்து - 31 பேர் உயிரிழப்பு!

சீனாவின் வடமேற்கு Yinchuan நகரில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் வெடி விபத்து - 31 பேர் உயிரிழப்பு!

சீனாவின் வடமேற்கு Yinchuan நகரில் உணவகம் ஒன்றில் நேற்று (22) மாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பத்தில் 7 பேர் வரை காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உணவகத்தில் வாயு கசிவின் காரணமான வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காயமடைந்த நபர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.