அமெரிக்க தளமொன்றின் மீது வான்வழி தாக்குதல் - மூவர் உயிரிழப்பு!

சிரியாவுடனான ஜோர்தானின் எல்லைக்கு அருகிலுள்ள அமெரிக்க தளமொன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் மூன்று அமெரிக்க துருப்பினர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க தளமொன்றின் மீது வான்வழி தாக்குதல் - மூவர் உயிரிழப்பு!

குறித்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் தீவிரமான ஈரான் ஆதரவு போராளிக் குழுக்களால் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு தகுந்த பதில் அளிக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, குறித்த பகுதியில் அமெரிக்க துருப்பினர் தாக்குதலுக்குள்ளான முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல் சிரியாவில் நடந்தப்பட்டுள்ளதாக ஜோர்தான் கூறுகிறது.