ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திற்குள் தமிழர்கள் செய்ய வேண்டியவை எவை பொஸ்கோ விளக்குகிறார்

கடந்த ஒன்பதாம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்கள் 720 பேர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான உத்தியோகபூர்வமற்ற அமர்வு ஒன்று கடந்த வாரம் நடைபெற்றது . 

அது அவர்களுக்குரிய கடமைகள் பற்றிய அல்லது பொறுப்புகள் பற்றிய அமர்வாக இடம் பெற்றிருந்தது.

அவ்வேளையில் பல காரணங்களால் உலகத்தமிழர் இயக்கத்தினால் ஐரோப்பிய பாராளுமன்றத்தினுள் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்திருக்கவில்லை. 

இருப்பினும் ஜூன் 24 அன்று புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஈழ விடுதலைக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக இருப்பது குறித்து மகிழ்வடைகிறோம். 

இன்று உலகத் தமிழர் இயக்கத்தினது கடிதத் தலைப்பில்,

தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகள் பற்றியும் தமிழர்கள் மீதான தடைகள் அகற்றப்பட வேண்டும் என்பது பற்றியும் முக்கியமாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நடைமுறையில் உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை அடங்கியதாகவும் உள்ளது.

அதேவேளை தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் உள்ளடங்கியதாக இவ்வறிக்கை 720 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சென்று சேரும் வகையில் அவர்களுக்கான உத்தியோகபூர்வ கடித பெட்டிகளில் சேர்த்திருக்கிறோம். 

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதுள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையும் இதன் அடிப்படையில் தமிழ் மக்கள் மீது 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையும் பிரதானமாக வைத்து உலகத் தமிழர் இயக்கத்தால் 12 பக்கங்கள் கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கை யின் தமிழாக்கம் விரைவில் காணொளியில் தரப்படும்.