இலங்கையின் கடன் மறு சீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு!

இலங்கையின் கடன் மறு சீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாரிஸ் கழக கூட்டத்தின் போது (PARIS Forum) இலங்கையின் கடன் மறு சீரமைப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்களின் குழுவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதன்போது இலங்கை - சீனா இடையிலான இருதரப்பு கடன் மறுசீரமைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், கடன் மறுசீரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா, ஜப்பான் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவித்த அவர் இலங்கைய எதிர்நோக்கியுள்ள கடன் நெருக்கடிக்கு தீர்வு காண இது முக்கிய திருப்புமுனையாக அமையும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்கான தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.