வான்வழி தாக்குதலில் 22 பேர் பலி - சூடானில் தொடரும் பதற்றம் !!

சூடான் நாட்டின் தலைநகர் கார்டூமுக்கு அண்மையில் உள்ள ஓம்தூர்மன் நகரில் குடியிருப்பு பகுதி மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டர்.

வான்வழி தாக்குதலில் 22 பேர் பலி - சூடானில் தொடரும் பதற்றம் !!

சூடான் நாட்டின் தலைநகர் கார்டூமுக்கு அண்மையில் உள்ள ஓம்தூர்மன் நகரில் குடியிருப்பு பகுதி மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டர்.

மேலும், பலர் காயமடைந்துள்ளதாக , சூடான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் மிக கொடூர தாக்குதலில் இது ஒன்றாகும். 

கடந்த மாதம் இதேபோன்று நடந்த வான்வழி தாக்குதல் ஒன்றில் 5 குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

சூடான் நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. 

இந்த ஆட்சியின் தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். 

அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை இராணுவப்படையின் தளபதியான ஜெனரல் மொஹம்மட் ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். 

இதனிடையே, இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

துணை இராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை இராணுவத்துடன் இணைக்க இராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். 

இதற்கு துணை இராணுவப்படை தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. 

இதனால், இராணுவத்திற்கும் - துணை இராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்படது. 

துணை இராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது. 

இராணுவ தளங்கள் மீது துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. 

இந்த மோதல் சம்பவத்தில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர். 

எனினும், இராணுவம் - துணை இராணுவம் இடையே அவ்வப்போது, போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டு தற்காலிக மோதல் நிறுத்தம் ஏற்பட்டு வருகிறது.