பிரான்ஸ் தூதுவர் திடீர் உயிரிழப்பு - அனைத்து உதவிகளையும் வழங்க இலங்கை தயார்!

பிரான்ஸ் தூதுவர் திடீர் உயிரிழப்பு - அனைத்து  உதவிகளையும் வழங்க இலங்கை தயார்!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) தனது வீட்டில் உயிரிழந்த நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இராஜகிரிய பகுதியிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

தனது 53வது வயதில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சடலம் மீதான நீதவான் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே, பிரான்ஸ் தூதுவரின்  திடீர் மரணம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள இலங்கை இது தொடர்பில் அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அதிகாரிகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த துயரமான தருணத்தில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இறுதிநிகழ்வுகள் குறித்த ஏற்பாடுகளை அதிகாரிகள் அறிவிப்பார்கள்என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.