அமெரிக்காவில் அணிவகுப்பொன்றில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி - 20 பேர் படுகாயம்!

அமெரிக்காவில் அணிவகுப்பொன்றில்  துப்பாக்கி சூடு -  ஒருவர் பலி - 20 பேர் படுகாயம்!

அமெரிக்க - கன்சாஸ் நகரத்தில் அணிவகுப்பொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 20 கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்திய மூன்று சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அத்துடன், காயமடைந்தவர்களில் 11 சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், இந்த வருடத்தின் கடந்த ஆறு வாரங்களில் மாத்திரம் அமெரிக்காவில் 44 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.