எரிமலை வெடிப்பு- ஐஸ்லாந்தில் அவசரநிலை பிரகடனம்!

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு சம்பவம் காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து நான்காவது முறையாகவும் அங்கு எரிமலை வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள ஸ்டோரா ஸ்கோக்ஃபெல் மற்றும் ஹகாஃபெல் இடையே எரிமலை வெடிப்பு ஆரம்பமாகியுள்ளதாக ஐஸ்லாந்தின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
இந்தநிலையில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் ஐஸ்லாந்தின் குடியுரிமைப் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை மேலாண்மைத் துறையினரால் முன்னெடுக்கபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 அதன் ஒரு கட்டமாக உலங்கு வானூர்திகள், புதிய பிளவு ஏற்பட்டுள்ள இடத்தைக் குறைக்க அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது