லிபியாவில் 1,000கும் அதிகமான சடலங்கள் மீட்பு - விமானப் போக்குவரத்து அமைச்சர்!

லிபியாவின் டெர்னா நகரிலிருந்து ஆயிரத்துக்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக லிபிய விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லிபியாவில் 1,000கும் அதிகமான சடலங்கள் மீட்பு - விமானப் போக்குவரத்து அமைச்சர்!

குறித்த நகரத்தை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுமார் 100,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட டெர்னா நகரில் இரண்டு அணைக்கட்டுகள் மற்றும் நான்கு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

அத்துடன், டேனியல் புயலின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10,000 பேர் வரை காணாமல் போயுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வீசிய புயல் காரமணாக லிபியாவின் கிழக்கு நகரங்களான பெங்காசி, சௌசா மற்றும் அல்-மார்ஜ் நகரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த அனர்த்தத்தினால் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.